பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பேட்டி

1 month ago 4

பேரவைக்கு வெளியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது: குறைவான நாட்கள் மட்டுமே சட்டப் பேரவையை கூட்டுவதால் மக்கள் பிரச்சனையை முழுமையாக அவையில் பேச முடியவில்லை. பெஞ்சல் புயல் வந்த போது, இந்திய வானிலை ஆய்வு மையம் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் தாழ்வான பகுதிகளுக்கு சென்றதால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.

வேளாண் பயிர்கள் கடுமையாக சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து அனைவருக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article