பெங்களூருவில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

4 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு தாலுகா சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யசருகட்டா அருகே உள்ள வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சந்துரு என்பவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 2 வாலிபர்கள் இருந்தார்கள். அந்த வீடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையின் போது போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த டேவிட், ஹோபே என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் கல்வி தொடர்பான விசாவில் இந்தியாவுக்கு வந்ததும், அவர்கள் விசா காலம் முடிந்தும் பெங்களூருவில் சட்டவிரோதமாக சந்துரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

கைதான 2 பேரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 1 கிலோ 520 கிராம் எம்.டி.ஏ. போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article