தூத்துக்குடி, மே 5: தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தில் இருந்து சிங்கத்தாகுறிச்சி செல்லும் சாலையில் மத்திய நுண்ணறிவுபிரிவு ஏட்டு மாணிக்கராஜ் மற்றும் போலீசார், வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பைக் ஒன்றை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். இதில் அந்த பைக்கில் 114 வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சிங்கத்தாகுறிச்சியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ரமேஷ் (36), சுடலை மகன் தேவராஜ் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தியதில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக வெளிமாநில மதுபானங்களை இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வாங்கி ரயில் மூலம் நெல்லைக்கு கடத்தி வந்தனர். பின்னர் அங்கிருந்து பைக்கில் கொண்டு சென்று விற்பனைக்கு முயன்றபோது வாகன சோதனையில் சிக்கிக்கொண்டது அம்பலமானது.
The post பெங்களூருவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 114 மதுபாட்டில் பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.