சென்னை: பெங்களூரு விமான நிலையத்தில் இடம் இல்லாததால் 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டன. பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவில் அதிகமான விமான சேவைகள் இயக்கப்பட்டன. இதனால் விமானங்களை பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், விமானங்கள் பெங்களூரில் தரையிறங்கி நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க வந்த 5 விமானங்கள், நள்ளிரவில் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அந்த வகையில் ஐதராபாத், ஹாங்காங், கோவா, ஃபிராங்க்ஃபர்ட், நாக்பூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூரு வந்த 5 விமானங்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, இங்கு வந்து தரை இறங்கின.