பெங்களூரு ரிசர்வ் வங்கியில் போலி 2,000 ரூபாய் தாள்களை மாற்ற முயன்ற 5 பேர் கைது

3 months ago 23
பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில், போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு மதிப்பிழப்பு செய்தாலும் அதனை ரிசர்வ் வங்கியில் நேரடியாக கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதன்படி, பெங்களூரைச் சேர்ந்த அப்சல் உசேன் சுமார் 25 லட்சத்திற்கு எடுத்து வந்த நோட்டுகளை பரிசோதித்த போது அவை கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த 4 பேர் கள்ள நோட்டு அச்சிட்டு வழங்கியது தெரிய வந்ததால் அவர்களையும் கைது செய்ததோடு கரன்சி அச்சிடும் இயந்திரம், 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் கரன்சி பேப்பர்களை பறிமுதல் செய்தனர்.
Read Entire Article