பெங்களூரு - பஞ்சாப் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

20 hours ago 2

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி மற்றும் 2 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் டாஸ் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article