பெங்களூரு 'ஏரோ இந்தியா 2025' விமான சாகச நிகழ்ச்சி நிறைவு

3 months ago 12

பெங்களூரு,

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய 'ஏரோ இந்தியா' நிகழ்ச்சி இன்று நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், ரஷியாவை சேர்ந்த Su-57 விமானம், அமெரிக்காவின் F-16 விமானம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் LUH, HTT-40, LCA Mk-1A மற்றும் IJT ஆகிய விமானங்கள், இந்திய விமானப்படையின் Su-30 MKI விமானம் ஆகியவை இடம்பெற்றன.

'ஏரோ இந்தியா 2025' நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள், ராணுவ தளபதிகள் உள்பட 84 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆண்டு 782 இந்தியர்கள் உட்பட 931 கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் 58 அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM) மற்றும் 115 உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article