பெங்களூரு அணியின் சாதனையை முறியடித்த மும்பை

1 month ago 5

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் எடுத்தார்இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கமே தடுமாறியது. 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த டெல்லி அணி 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் சாதனையை மும்பை முறியடித்துள்ளது.அதிகமுறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் பெங்களூரு (10) அணியின் சாதனையை மும்பை (11) முறியடித்துள்ளது.

அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் சென்னை அணி (12) முதலிடத்தில் உள்ளது.

Read Entire Article