பெங்களூரு: பெங்களூரு அடுத்த நெலமங்களா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு அடுத்த நெலமங்களா பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் ஆயில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. கார் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆயில் வைக்கப்பட்டிருந்த குடோனில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் தீ பிடித்தது.
ஆயில் கேன்கள் அதிக அளவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. சுமார் 10 கி.மீ. வரை புகை மண்டலமாக மாறிய நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 70 முதல் 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் எரிந்து போன ஆயில்களின் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் கூறுகையில், குடோனில் ஆயில் கேன்கள் இருந்துள்ளன.
தீ எப்படி பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணம் என தெரியவந்துள்ளது என்றனர். உள்ளூரை சேர்ந்த சிலர் கூறியதாவது: அதிகாலையில் குடோனில் தீ எரிந்தது. இதனால் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் புகை மண்டலமாக காணப்பட்டது. தீயணபை்பு படை வீரர்கள் விரைவாக வந்து தீயை அணைப்பதற்கு முயன்றாலும் ஆயில் குடோன் என்பதால் அருகே கூட நெருங்க முடியவில்லை, தீ விபத்து 10 கி.மீ தூரத்தில் இருந்து கூட தெரிந்தது, மேலும் அடர்ந்த புகை வானத்தை நிரப்பியது, உள்ளூர்வாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியது என்றனர்.
The post பெங்களூரு அடுத்த நெலமங்களா அருகே ஆயில் குடோனில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.