பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி

5 hours ago 1

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு ரத யாத்திரை நேற்று முன் தினம் தொடங்கியது. திருவிழா 9 நாட்கள் நடைபெறும்.

இந்நிலையில், ஜெகநாதர் ரத யாத்திரை இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் தொடக்கியது. ஜெகநாதர் கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலையில் உள்ள ஸ்ரீ கண்டிஜா கோவிலில் இருந்து ரத யாத்திரை தொடங்கியது. யாத்திரையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,.

Read Entire Article