பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி..

3 months ago 26
கோவையில், பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி 11 பேரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர். பூ மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரும் தமிழ்பாண்டியனுக்கு வீரகேரளத்தைச் சேர்ந்த விஜயகுமார்- பிரியதர்ஷினி தம்பதி அறிமுகமாகி உள்ளனர். தாங்கள் 10 இடங்களில் நடத்தி வரும் பூக்கடைக்கு கடன் வழங்கினால் லாபத்தில் பங்குத் தருவதாக கூறியதால் தமிழ்பாண்டியன் 21 லட்சம் வழங்கியதோடு நண்பர்களையும் கடன் வழங்க வைத்துள்ளார். சில மாதங்கள் மட்டுமே தம்பதியர் லாப பங்கு கொடுத்த நிலையில் பின்னர் வழங்கவில்லை என போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
Read Entire Article