புஷ்பா படத்தை பார்த்து மாணவர்கள் கெட்டுப்போயுள்ளனர்: ஒழுங்கீன ஹேர்ஸ்டைல்; ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை!

2 hours ago 2

ஹைதராபாத்: புஷ்பா திரைப்படம் மாணவர்களிடையே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐதராபாத் யூசஃப்குடா பகுதி அரசுப் பள்ளி ஆசிரியை வேதனை தெரிவித்துள்ளார். இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ.1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் புஷ்பா படத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் நடத்தை குறித்து தெலங்கானா அரசு பள்ளி ஆசிரியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநிலக் கல்வி ஆணையத்துடன் கடந்துரையாடல் நடத்தியுள்ளனர். அதில் பங்கேற்ற ஹைதராபாத்தின் யூசஃப்குடாவைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவர்களின் நடத்தை குறித்து பேசியிருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது; புஷ்பா திரைப்படம் மாணவர்களிடையே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கீனமான ஹேர்ஸ்டைல், அநாகரிகமாக பேசுவது என மாணவர்கள் புஷ்பா படத்தை பார்த்துதான் கெட்டுள்ளனர். கல்வியில் அதிக கவனத்தை செலுத்திவிட்டு, ஒழுக்கத்தை கவனிக்க தவறிவிட்டோம். இதெல்லாம் பார்க்கையில் மாணவர்களிடம் நீ செய்வது தவறு என்று சொல்ல முடியாமல் ஒரு ஆசிரியராய் நான் தோற்றது போல் உணர்கிறேன். எந்த சமூக பொறுப்பும் இன்றி அப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த ஆசிரியர் வேதனை தெரிவித்துள்ளார்.

The post புஷ்பா படத்தை பார்த்து மாணவர்கள் கெட்டுப்போயுள்ளனர்: ஒழுங்கீன ஹேர்ஸ்டைல்; ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை! appeared first on Dinakaran.

Read Entire Article