'புஷ்பா 2' இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

2 weeks ago 1

ஐதராபாத்,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியான படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் ரூ.1850 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று 'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் அவருடைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனையின் போது இயக்குனர் சுகுமார் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் விமான நிலையத்தில் இருப்பது தெரிந்து அங்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள். பல மணிநேரம் சோதனை நடந்திருக்கிறது. அந்த சோதனையின் போது என்ன சிக்கியது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

#JUSTIN || புஷ்பா 2 - இயக்குநர் வீட்டில் ரெய்டுபுஷ்பா 2 பட தயாரிப்பாளரை தொடர்ந்து,இயக்குநர் சுகுமாரின் இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை #DirectorSukumar | #Pushpa | #ITRaid | #IncomeTax | #ThanthiTV pic.twitter.com/wZ2Yt9edGh

— Thanthi TV (@ThanthiTV) January 22, 2025
Read Entire Article