புழல் சிறையில் ‘சிறைகளில் கலை’ திட்டத்தில் பயின்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்

5 months ago 31

புழல்: புழல் சிறையில் “சிறைகளில் கலை’’ திட்டத்தில் பயிற்சி பெற்ற 40 கைதிகளுக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி சான்றிதழ்களை வழங்கினார். புழல் தண்டனை சிறையில் சுமார் 800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும், கைதிகளை சீர்திருத்தவும் “சிறைகளில் கலை’’ என்ற புதிய திட்டத்தினை கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.

இந்த, திட்டத்தில் கைதிகளுக்கு ஆழ்நிலை தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற பயிற்சிகள், டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் சமண சா அறக்கட்டளை தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 40 கைதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், ஓராண்டு பயிற்சி பெற்ற 40 கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தண்டனை சிறை வளாகத்தில் நடைபெற்றது. சிறைத்துறை தலைமை இயக்குநர் மகேஸ்வர் தயால் தலைமை தாங்கினார்.

அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு, பயிற்சிபெற்ற 40 கைதிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணா, சிறைத்துறை துணை தலைவர்கள் கனகராஜ், முருகேசன், தண்டனை சிறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன், மாதவரம் மண்டலக்குழு தலைவர் நந்தகோபால், சிறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post புழல் சிறையில் ‘சிறைகளில் கலை’ திட்டத்தில் பயின்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article