புள்ளகுட்டி பெயர் சொல்வாரம்.. உதவியாளர் பெயர் வேணாமாம்.. வெற்றிமாறன் செய்தது சமூக நீதியா..? சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா..

2 months ago 6
இளையராஜாவால் கலகலப்பாக நடந்த விடுதலை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் , முன்னதாக பேசிய இயக்குனர் வெற்றி மாறன் டென்சனாகி மைக்கை வைத்து விட்டு சென்ற காட்சிகள் தான் இவை..! விஜய் சேதுபதி - சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசும் போது ராஜா சார், நேரத்தை சரியாக கடைப் பிடிக்க கூடியவர் , Cஆனால் அது எனக்கு சிரமமாக இருக்கும் என்று சிரித்தபடியே கூறினார். இந்த படம் சிறப்பாக வர தன்னுடன் இணைந்து பணியாற்றிவர்கள், உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது தனது குழந்தைகள், குடும்பத்தினர் அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்த வெற்றி மாறன் நாயகியாக நடித்த மஞ்சுவாரியர் பெயர் விடுபட்டதாக சுட்டிக்காட்டியதும் அவருக்கும் நன்றி கூறினார் அதன் தொடர்ச்சியாக தனது டீமிற்கும் நன்றி.. என்று சொன்ன வெற்றிமாறனிடம், உதவியாளர்களின் பெயர்களை கூறுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது, டீம்ன்னாலே எல்லோரும் வந்து விடுவார்களே என்று ஆதங்கப்பட்ட வெற்றி மாறன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ? மைக்கை படக்கென்று வைத்து விட்டு சென்று விட்டார் அதனை தொடர்ந்து பேச வந்த இளையராஜா, வழக்கத்துக்கு மாறாக நடிகர் சூரியை கலாய்த்து நகைச்சுவையாக பேசி நிகழ்ச்சியில் கலகலப்பூட்டினார். இந்த நிலையில் தனது திரைப்படங்களில் சமூக நீதி பேசும் வெற்றிமாறன், தனது உதவியாளர்களின் பெயர்களை குறிப்பிட மறுத்து மைக்கை வைத்துச்சென்றது நியாயமா ? என்று சிலர் விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில் நேரமின்மையால் வெற்றிமாறன் , தனது உதவியாளர் பெயர்களை குறிப்பிடவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article