புளியந்தோப்பு சரகத்தில் ஒரேநாளில் 13 ரவுடிகள் கைது

3 months ago 24

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட டிகாஸ்டர் ரோடு பகுதியில் குட்கா விற்ற புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (21), முகமது அஷ்ரப் (27), இர்பான் (24), ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிஎஸ் மூர்த்தி நகர் பகுதியில் போதையில் பொதுமக்களை அச்சுறுத்திய சரித்திர பதிவேடு ரவுடியான ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த அருண் (எ) அப்பு (35), பேசின் பிரிட்ஜ் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தனிகா (எ) தணிகைவேல் (42), எம்கேபி நகர் பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வியாசர்பாடி முல்லை நகரைச் சேர்ந்த விக்னேஷ் (எ) ஊரான் (19), சரத் (21), கணேஷ் (32), அரவிந்தன் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலை பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடி அஜய் (எ) மண்ணு மூட்டை (21), குகன் (எ) வெள்ளை குகன் (19), அரவிந்த் (28) ஆகிய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி பகுதியில் இம்ரான் (29) என்பவரை அடித்து அவரிடம் இருந்து ரூ.2000 பறித்த வழக்கில் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கோகுல் (23) (எ) நபர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு புளியந்தோப்பு சரகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post புளியந்தோப்பு சரகத்தில் ஒரேநாளில் 13 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article