புரோ கபடி லீக்: மும்பை-பெங்கால் ஆட்டம் சமனில் முடிந்தது

2 months ago 16

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான யு மும்பா- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கத்தில் அதிக்கம் செலுத்திய பெங்கால் அணி முதல் பாதியில் 20-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட மும்பை அணி பெங்காலை ஆல்-அவுட் செய்தது. முடிவில் இந்த ஆட்டம் 31-31 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமனில்) முடிந்தது. நடப்பு தொடரில் டையில் முடிந்த முதல் ஆட்டம் இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தபாங் டெல்லி 41-37 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை சாய்த்தது.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), உ.பி. யோத்தாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

 

Read Entire Article