புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் ஆட்டம் 'டிரா'

15 hours ago 2

புனே,

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்நிலையில், இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் இன்று தொடங்கியது . இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்ட நேர முடிவில் 34-34 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. 

Read Entire Article