புரோ கபடி லீக் தொடரில் இன்று குஜராத்-ஜெய்ப்பூர், பெங்கால்-பெங்களூர் மோதல்

1 month ago 4

புனே: புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்க முதலே அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 46-25 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அபார வெற்றிபெற்றது.2வது லீக் போட்டியில் புனேரி பால்டன் – தபாங் டெல்லி அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இறுதியில் 30-26 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி பெற்றது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், 9 மணிக்கு நடைபெறும் 2வது லீக் போட்டியில் பெங்கால்வாரியர்ஸ்-பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

The post புரோ கபடி லீக் தொடரில் இன்று குஜராத்-ஜெய்ப்பூர், பெங்கால்-பெங்களூர் மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article