
லீட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 6 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய வீரர் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம் என இங்கிலாந்தின் பென் டக்கட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். எந்த ஒரு சூழலாக இருந்தாலும், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர் ஒருவரை எதிர்கொள்வது மிகவும் கடினம். பந்தினை இரண்டு விதமாகவும் ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர் பும்ரா.
ஒரு ஓவரில் அவரால் நான்கு வித்தியாசமான முறைகளில் பந்துவீச முடியும். அவர் பவுன்சர் வீசப்போகிறாரா, மெதுவாக வீசப் போகிறாரா, யார்க்கர் வீசப் போகிறாரா அல்லது ஸ்விங் செய்யப்போகிறாரா என்பது நமக்குத் தெரியாது. அவர் பந்துவீச்சில் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக ரன்கள் குவிப்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.