புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகள்

3 months ago 8

தஞ்சாவூர், பிப்.6: தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா தொடர்பான பாதுகாப்பு பணிகள் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வரும் 10 தேதி அன்று காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இக்கோயில் திருக்குடமுழுக்கு தொடர்பான பாதுகாப்பு பணிகள் மற்றும் அனைத்து முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள், குப்பை தொட்டிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு பேருந்து வசதிகள் போன்றவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் பாதுகாப்பாகவும், எவ்வித சிரமுமின்றி காணும் வகையில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற பணிகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், நகர நல அலுவலர் நமச்சிவாயம், நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் கீதா, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் இராஜ பாபாஜி ராஜா போன்ஸ்லே , செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article