புனித லூர்தன்னை ஆலய பொங்கல் விழா வழிபாடு

3 months ago 8

மதுரை, பிப். 17: மதுரை கோ.புதூரில் உள்ள புனித லூர்தன்னை ஆலயத்தின் 105ம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு. 10ம் நாளான நேற்று பொங்கல் விழா நடை பெற்றது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். இதன்படி மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரகணக்கான இறைமக்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தும் வகையில் ஆலயத்தில் அன்னைக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகள், செபமாலை மற்றும் நோயாளிகளுக்கான சிறப்பு பிரார்த்தனை உள்ளிட்டடவை நடைபெற்றன. பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்கு பங்குதந்தை ஜார்ஜ் தலைமை வகித்து, மறையுரை நிகழ்த்தினார். உதவி பங்கு தந்தையர்கள் பாக்கியராஜ், ஜஸ்டின், பிரபு மற்றும் திருத்தலத் தொண்டர் அஜிலாஸ் முன்னிலை வகித்தனர். மாலையில் நற்கருணை ஆராதனைக்கு பிறகு திருவிழா கொடி இறக்கப்பட்டது.

The post புனித லூர்தன்னை ஆலய பொங்கல் விழா வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article