புத்தாண்டு வாகன தணிக்கையின் போது பைக் ரேஸில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல்

4 months ago 11

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நகரம் முழுவதும் நேற்று நடந்த வாகன தணிக்கையில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டயவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் இரவில் பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்வது வழக்கம். சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

நாடு முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என களைக்கட்டும். அப்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்துறை குடியிருப்புப் பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

2025ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலில் இறங்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் காவல் ஆணையர் தடை விதித்துள்ள நிலையில் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸில் ஈடுபட்ட 242 வாகனங்களை பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

The post புத்தாண்டு வாகன தணிக்கையின் போது பைக் ரேஸில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article