புத்தாண்டு கொண்டாட்டம்!

10 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

*ரஷ்யா நாட்டில் கிறிஸ்துமஸ் மரம் போல் புத்தாண்டு மரம் வைப்பார்கள். மரத்தின் உச்சியில் நட்சத்திரம் மட்டும் இருக்கும். குழந்தைகள் மரத்தின் கீழ் அமர்ந்து பாடல் பாடுவார்கள். கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போல் புத்தாண்டு அன்று பனி தேவதை குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்து அவர்களை மகிழ்விப்பார்கள்.

*இங்கிலாந்தில் ஜனவரி முதல் நாள் பொழுது விடிந்ததும் கையில் ரொட்டி மற்றும் நிலக்கரித் துண்டும் ைவத்துக் கொண்டு நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது வழக்கம். இதனால் ஆண்டு முழுதும் உணவுக்கு பஞ்சம் ஏற்படாது என்பது அவர்களின் நம்பிக்கை.

*தென்கொரியாவில் புத்தாண்டு தினத்தில் பெரும்பாலோர் சொந்த கிராமத்துக்கு சென்று விடுவர். புத்தாடை அணிந்து பெற்றோரிடம் ஆசிப் பெற்று உறவினர்களுடன் விருந்து உண்பது அவர்களின் முக்கிய நிகழ்வு.

*ஜெர்மனியில் புத்தாண்டு அன்று ஒரு சிறு பனிக்கட்டியை கீழே போட்டு உருக விடுவர். அது உருகி இதய வடிவில் அல்லது மோதிரவடிவில் வந்தால் திருமணம் நடக்கும் என்று அர்த்தம். கப்பல் வடிவில் வந்தால் பயணம். பன் வடிவில் வந்தால் உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் வராது என்று நம்பிக்கை.

*ஆஸ்திரேலியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31 இரவு 12.00 மணிக்கு விசில் சத்தம் எழுப்புவர். அந்நேரத்தில் குதிரை மீது சவாரி செய்வது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

*ஸ்பெயினில் டிசம்பர் 31 நள்ளிரவு 12.00 மணிக்கு 12 முறை கடிகார மணி அடித்து முடிப்பதற்குள் 12 திராட்சைகளை சாப்பிட்டால் புத்தாண்டு இனிமையாக இருக்கும் என நம்புகின்றனர்.

*ஹங்கேரியில் புத்தாண்டு அன்று ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கொடும்பாவியை எரிக்கின்றனர். இதனால் ஊருக்குள் வந்த கெட்ட சக்தியை அழிப்பதாக நம்புகின்றனர்.

தொகுப்பு: ச.லெட்சுமி, தென்காசி.

The post புத்தாண்டு கொண்டாட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article