புத்தகம் தொடர்ந்து வாசித்து பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள் - கவர்னர் அறிவுரை

3 hours ago 2

யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கிண்டி கவர்னர் மாளிகைக்கு நேரில் அழைத்து கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்தார்.

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி சால்வை அணிவித்து கம்ப ராமாயணம் புத்தகத்தை பரிசாக அளித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல; உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள். உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டே இருங்கள்; பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் வாங்குவதோ போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article