புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை மனைவி பிறந்த நாளில் சோகம் செய்யாறு அருகே திருமணமான 6 மாதங்களில்

4 months ago 10

 

செய்யாறு, ஜன. 6: செய்யாறு அருகே திருமணமான 6 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பிரம்மதேசம் கிராமம் துர்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(28). செய்யாறு சிப்காட்டில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு பகுதியை சேர்ந்த தேவி(19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தேவி சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் தேவிக்கு பிறந்தநாளாம். இதனால் கோயிலுக்கு சென்று வரலாம் என அழைத்துள்ளார். அதற்கு மணிகண்டன், கம்பெனிக்கு லீவு போட்டு விடு, கோயிலுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். ஆனால் தேவி கோயிலுக்கு சென்றுவிட்டு கம்பெனிக்கு செல்கிறேன்.
லீவு போட முடியாது என கூறியுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேவி கம்பெனிக்கு சென்று விட்டாராம்.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து தேவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 6 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை மனைவி பிறந்த நாளில் சோகம் செய்யாறு அருகே திருமணமான 6 மாதங்களில் appeared first on Dinakaran.

Read Entire Article