புதுச்சேரி: எஃப்.ஐ.ஆர் நகலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரத்தில் போக்குவரத்து எஸ்.ஐ மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டில் நடந்த விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட நபருக்கு வில்லியனூர் போக்குவரத்துக்கு காவல் நிலையத்தில் FIR நகல் கேட்கப்பட்டது.இதற்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கர் லஞ்சம் கேட்டுள்ளார். எனவே அவர் மீது ஐ.ஜியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் தலைமையகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணை அடிப்படையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டு போக்குவரத்து உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து ஐஜி உத்தரவு பிறப்பித்தார்.இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்து எஸ்.ஐ பாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுச்சேரியில் எஃப்.ஐ.ஆர் நகலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம்; போக்குவரத்து எஸ்.ஐ மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு appeared first on Dinakaran.