புதுச்சேரியில் இன்று முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்

3 hours ago 4

புதுச்சேரி,

புதுச்சேரியில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த வினாடி-வினா போட்டி நடத்தி ஹெல்மெட்டை பரிசாக வழங்கினார்கள்.

இதனிடையே புத்தாண்டு தினத்தன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மேலும் சில நாட்கள் கழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அமல்படுத்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்று அரசு நிர்வாகம், உயர்கல்வி துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று (12-01-2025) முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது அமலுக்கு வந்துள்ளது. இதை தவிர்த்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இதே தவறை செய்தால் 3 மாதங்களுக்கு அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article