ஒட்டு மொத்த தேசத்திற்கும் கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்தவர் விவேகானந்தர் - அண்ணாமலை

3 hours ago 3

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகள் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களைச் சிறந்த சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்கிய வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று.

பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர். ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்தவர்.

இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை விதைத்த அவரது பிறந்த தினமான இன்று, தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நாட்டிற்காகவும், எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, பக்தி மற்றும் சேவையின் அடையாளமாக விளங்கும், சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகள் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களைச் சிறந்த சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்கிய வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று.

பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக்… pic.twitter.com/uCJ3ksnf0E

— K.Annamalai (@annamalai_k) January 12, 2025

Read Entire Article