புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்

3 months ago 14

புதுச்சேரி,

நாடு முழுவதும் வருகின்ற 31ம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, மளிகைப் பொருட்கள், பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் கடை வீதிகள் கூட்டமாகக் காணப்படுகின்றன. பொதுமக்களின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளன.

இந்த சூழலில் புதுச்சேரி அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவகுமார் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு நகலானது அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500ம் தீபாவளி போனசாக அறிவித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு, மானிய விலையில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

Read Entire Article