புதுச்சேரியில் 16, 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை

3 hours ago 3

புதுச்சேரி,

பொங்கல் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் கொண்டாட ஏதுவாக, வெள்ளிக்கிழமையும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுவையிலும், மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக,16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகும். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பிப்ரவரி 1 மற்றும் 8 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Read Entire Article