புதுச்சேரி: புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்; 57 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு, புதுச்சேரி கடற்கரை சாலை, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஒன்று கூடி, கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் புத்தாண்டை வரவேற்றனர். மேலும் நகரம் மற்றும் கிராமங்களில் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் உற்சாகமாக வலம் வந்தனர். சிலர் அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்தனர். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர். 2 பேர் உயிரிழந்தனர்.