புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு

6 months ago 40
புதுக்கோட்டையில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வடக்கு நாலாம் வீதி மாப்பிள்ளையான் குளம் அருகே வந்த ஆட்டோ வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்த கைக்குழந்தை உள்பட குடும்பத்தினரை இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர். காமராஜபுரம் 21ஆம் தெருவில் தர்மன் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், குடும்பத்தினர் காயமின்றி தப்பினர். ஜீவா நகர், மாப்பிள்ளையார் குளம், அடப்பன்வயல், காந்தி நகர் உசிலங்குளம், அக்கச்சிவயல், பெரியார் நகர், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article