புதுக்கோட்டை, ஜன.11: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உட்கோட்டம் நெடுஞ்சாலை பாதுகாப்பு அழகு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் நேற்று திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விபத்தில் தமிழ்நாடு எங்கள் பொறுப்பு என்ற தலைப்பில் மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கோட்ட பொறியாளர்கள் பிரமிளா, ரவிச்சந்திரன், உதவி செயற்பாடு தியாகராஜா ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து கருத்தரங்கத்தை டிஜிட்டல் கிளாஸ் மூலமாக மாணவர்களுக்கு விளக்கினர். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பே்ணி அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கி பள்ளிவாசல் வரை நடைபெற்றது. பேரணியில் தலைக்கவசம் உயிர்க்கவசம் போன்ற சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி சென்றனர். அந்த வழியாக வந்த வாகணங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு அடங்கிய நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
The post புதுக்கோட்டை திருவரங்குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.