புதுக்கோட்டை, ஜன.17: புதுக்கோட்டை மாவட்டம் கருவேப்பிலான் கேட் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (35). இவரது தந்தை வெங்கடாஜலம். புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக பி்ரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில்சிகிச்சை பலனின்றி வெங்கடாஜலம் இறந்துவிட்டார்.
உடலை எடுத்து செல்ல அமரர் ஊர்தி வர தாமதம் ஆனதாக கூறி செவிலியர் பானுமதியை தாக்கிதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து செவிலியர்கள் பலர் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். போரட்டத்தின் போது செவிலியரை தாக்கிவரை கைது செய்ய வேண்டும், முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர். இதனையடுத்து ராமலிங்கம் மீது வழக்கு பதிவு செய்த கணேஷ் நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.
The post புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நர்சை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.