புதுகை அருகே இருதரப்பு மோதல் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

10 hours ago 1

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாட்டில் கடந்த 5ம்தேதி இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை மோதலாக மாறியது. குடிசை, வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவமும் நடந்தது. இதில் ஆயுதங்களில் தாக்கிகொண்டதில் இருதரப்பை சேர்ந்த 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு தரப்பில் 20 பேர், மற்றொரு தரப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் காவல் நிலையம் இருக்கும் பகுதியிலேயே குடிசை, வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவம் நடைபெற்றது.

இதனால், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க தவறியதாக ஒரு தரப்பினரும், வடகாடு இன்ஸ்பெக்டர் தனபாலன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக மற்றொரு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, வடகாடு இன்ஸ்பெக்டர் தனபாலனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

 

The post புதுகை அருகே இருதரப்பு மோதல் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article