குன்னம், பிப். 18: குன்னம் வட்டம், வேப்பூரில் இருந்து புதிய வழிதடத்தில் பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். வேப்பூரில் இருந்து நன்னை, மாதிரி பள்ளி, கிழுமத்தூர், கைப்பெரம்பலூர், அத்தியூர்குடிக்காடு, அத்தியூர், அகரம்சீகூர், வழியாக திட்டக்குடி செல்லும் கட்டணமில்ல மகளிர் இலவச பேருந்தை வேப்பூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லபிள்ளை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் மருவத்தூர் ராஜேந்திரன், மதியழகன், விவசாய அணி செயலாளர் வரகூர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை appeared first on Dinakaran.