புதிய மின் இணைப்பு பெற ₹1800 லஞ்சம் வாங்கிய வழக்கில் கமர்சியல் இன்ஸ்பெக்டருக்கு சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி

1 month ago 9

செங்கல்பட்டு, அக்.5: வீட்டிற்கு இரண்டு புதிய மின் இணைப்பு வழங்க ₹1800 லஞ்சம் வாங்கிய கமர்சியல் இன்ஸ்பெக்டருக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றம் சிறை தண்டணை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னை, ஜல்லடியான்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவர் தனது வீட்டிற்கு இரண்டு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக சென்னை, மேடவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு கடந்த 9.3.12ம் ஆண்டு கமர்சியல் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா என்பவரை சந்தித்து மின் இணைப்பு கேட்டுள்ளார்.

அப்போது, அவர் ₹1800 லஞ்சப் பணம் கேட்டுள்ளார். இதில், லஞ்சப் பணத்தை கொடுக்க விரும்பாத தனசேகரன் சென்னை நகர பிரிவு-5, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், அன்றைய தினமே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்கு பதிவு செய்து மறைந்திருந்து நடவடிக்கை மேற்கொண்டு லஞ்சம் பணம் பெறும்போது ராஜேஷ் கண்ணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெய நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், ராஜேஷ்கண்ணாவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹20 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.

The post புதிய மின் இணைப்பு பெற ₹1800 லஞ்சம் வாங்கிய வழக்கில் கமர்சியல் இன்ஸ்பெக்டருக்கு சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article