புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பழங்குடியின நடனம் மூலம் நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் பெண் எம்பி

1 hour ago 2

வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மவோரி இனத்தை சேர்ந்த இளம் பெண் எம்.பி. தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டன் அரசுக்கும், நியூசிலாந்தின் பூர்வகுடி மக்களான மவோரி மக்களுக்கும் இடையே 184 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உடன்படுக்கையில் சில திருத்தங்களை கொண்டுவர ஆளும்கட்சி மசோதா இயற்றியது.

இதற்கு அவையில் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி. ஹானா ரவ்ஹிதி தங்களது பாரம்பரிய நடனமான ஹக்காவை அரகேற்றியதுடன் மசோதா நகலை கிழித்தெறிந்தார். அப்போது மவோரி இனத்தை சேர்ந்த மற்ற எம்.பி.க்களும் அவருடன் சேர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து மவோரி இன எம்.பி.க்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 22 வயதான ஹானா ரவ்ஹிதி தனது முதல் உரையின்போது மவோரி மொழியில் பேசியது உலகம் முழுவதும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

The post புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பழங்குடியின நடனம் மூலம் நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் பெண் எம்பி appeared first on Dinakaran.

Read Entire Article