புதிய அமைச்சர்கள் அந்தந்த துறைகளில் பொறுப்பேற்பு: துணை முதல்வருக்கான செயலாளர்கள் விரைவில் நியமனம்

3 months ago 23

சென்னை: புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். துணை முதல்வருக்கான செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். மேலும் அமைச்சரவையில், வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டி.மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

Read Entire Article