புதின் நன்றாக பேசுகிறார்; ஆனால் செயல்பாடுகள் சரியில்லை- டொனால்டு டிரம்ப் தாக்கு

2 days ago 4

வாஷிங்டன், 

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஆனால், இதில் இன்னும் உடன்பாடு எட்டப்படாததால், உக்ரைன் மீது ரஷியா குண்டு மழை பொழிந்து வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் டிரம்ப், புதினை கடுமையாக விமர்சித்து வருகிறார். வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார்.

உக்ரைனுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது."என்றார். எனினும், எத்தனை ஆயுதங்கள் வழங்கப்படும் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. அதேபோல, ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்பதையும் டிரம்ப் சூசகமாக குறிப்பிட்டார்.

Read Entire Article