புதிதாக கட்சி தொடங்குவோர் தி.மு.க அழிய வேண்டும் என்று கருதுகின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 months ago 13
புதிதாக கட்சி தொடங்குவோர் திமுக அழிய வேண்டும் என்று கருதுகின்றனர், ஆனால் அதைப்பற்றி கவலைப்படப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கொளத்தூரில் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். பின்னர், அனிதா அகாடமி மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசிய அவர், தி.மு.க அரசை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார். நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு ஒரு நாள் மத்திய அரசு பணியத்தான் போகிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னர், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர், நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
Read Entire Article