மங்கலம்பேட்டை, பிப். 18:கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் விருத்தாசலம் காவல் உட்கோட்ட தனிப்பிரிவு போலீசார் மற்றும் மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான சத்யகுமார், நடராஜ் உள்ளிட்ட போலீசார் மங்கலம்பேட்டை அருகேயுள்ள டி.மாவிடந்தல் கிராமப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, டி.மாவிடந்தல், புது தெருவை சேர்ந்த கலீல் ஷேக் மகன் ஷாஜஹான்(53) என்பவர், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4,500 மதிப்புள்ள ஆறரை கிலோ அளவிலான பான்பராக், விமல், விஒன், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை வீட்டில் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது, மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.