புகையிலை பொருட்களை பதுக்கிய குளிர்பான கம்பெனி டீலர் அதிரடி கைது: மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை

2 months ago 12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பிரபல குளிர்பான கம்பெனி டீலரை, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாயார்குளம், கனிகண்டீஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வருபவர் குமார் (44). பிரபல குளிர்பான கம்பெனியின் டீலராக உள்ளார். இவருடைய, 2 குடோன்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ளது.

இவர், போதை வஸ்துகள் விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான மதுவிலக்கு போலீசார், அதிரடியாக குமாரை மடக்கிப் பிடித்து, அவரது வீட்டை சோதனையிட்டபோது, விற்பனை போக மீதம் வைத்திருந்த தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களான விமல் 180 பாக்கெட்டுகள், ஹான்ஸ் புகையிலை 120 பாக்கெட்டுகள் மற்றும் மதுபானம் போன்றவைகளும் இருந்தது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி, அவருடைய படுக்கை அறையில் பெட்டுக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம் மற்றும் காட்டன் சூதாட்டம் செய்ததற்கான ஆதாரங்களையும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து தனியார் குளிர்பான கம்பெனி டீலர் குமாரை கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புகையிலை பொருட்களை பதுக்கிய குளிர்பான கம்பெனி டீலர் அதிரடி கைது: மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article