பு.புளியம்பட்டி வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது

2 months ago 10

சத்தியமங்கலம், நவ.15: புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் மற்றும் விளைநிலங்களில் நடவு செய்யப்படும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு 800க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காய விலை கிலோ ரூ.20 ஆக குறைந்து விற்பனையானது. கடந்த வாரம் கிலோ ரூ.50க்கு விற்ற சின்ன வெங்காயம் நேற்று விலை குறைந்து கிலோ ரூ.20 முதல் ரூ.30வரை விற்பனையானது. சின்ன வெங்காயம் விலை குறைந்ததால் போட்டி போட்டு மூட்டை மூட்டையாக மக்கள் வாங்கிச் சென்றனர். மேலும், விதை வெங்காய விலையும் குறைந்ததால் விவசாய நிலங்களில் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டினர்.

சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாய நிலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிகளவில் வாங்கிச்சென்றனர்.

The post பு.புளியம்பட்டி வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article