பீட்ரூட் ரைஸ்

1 month ago 9

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – கால் கிலோ
பாஸ்மதி அரிசி – 4 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் – அரை டேபிள் ஸ்பூன்
கரம்மசாலாத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு

தாளிக்க :-

எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை :-

முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 8 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, மூடி போட்டு மூடி, 3 விசில் விட்டு இறக்கவும்.பிறகு பீட்ரூட்டை துருவி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மல்லித் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.பீட்ரூட் வெந்ததும் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, கொத்த மல்லியைத் தூவி பரிமாறவும். இப்போது சுவையான பீட்ரூட் சாதம் ரெடி.

The post பீட்ரூட் ரைஸ் appeared first on Dinakaran.

Read Entire Article