பாட்னா: பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் பாதயாத்திரையில் ராகுல் காந்தி பங்கேற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர குரல் கொடுத்தார். பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி போட்டியிடுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் இளைஞரணி சார்பில் பீகார் மாநிலம் பெகுசராயில் நேற்று பாதயாத்திரை பேரணி நடைபெற்றது.
காங்கிரசின் தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய பொறுப்பாளர் கன்னையா குமார் தலைமையில் நடந்த இப்பேரணியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி வெள்ளை நிற டிசர்ட் அணிந்து பங்கேற்றார்.
முன்னதாக தனது எக்ஸ் தள பதிவில், ‘உலகின் கவனத்தை ஈர்த்து, பீகார் அரசுக்கு அழுத்தம் கொடுக்க இளைஞர்கள் அனைவரும் வெள்ளை டிசர்ட்டுடன் பாதயாத்திரைக்கு வாருங்கள்’ என அழைப்பு விடுத்திருந்தார்.
பாதயாத்திரையில் பீகார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், அவர்கள் பிற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்வதை தடுக்க வேண்டுமென கோஷமிடப்பட்டனர்.
The post ‘பீகார் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை கொடு’ காங். பாதயாத்திரையில் ராகுல் பங்கேற்பு appeared first on Dinakaran.