"பிளாக்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 months ago 25

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல திகிலூட்டும் காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிளாக் திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Time's up! #BLACK is set to release in theatres on October 11. Get ready to witness a thrilling journey… @JiivaOfficial @priya_Bshankar @kgBalasubramani @actorvivekpra #ShivaShahra @iamswayamsiddha @gokulbenoy @SamCSmusic @madhankarky @ArtSathees @philoedit #MetroMageshpic.twitter.com/SSZm4nB0cC

— Jiiva (@JiivaOfficial) October 4, 2024
Read Entire Article