நெல்லை, மே 16:புதூர் கிங்ஸ் பள்ளியில் 73 மாணவர்கள் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதினர். தேர்வெழுதிய அனைவருமே தேர்ச்சிப் பெற்ற நிலையில் 550க்கு மேல் 16 மாணவர்களும் 500க்கு மேல் 18 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவி பூர்ணிமா 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று நெல்லை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-99, ஆங்கிலம்-99, இயற்பியல்-100, வேதியியல்-100, கணிதம்-100, கணினி அறிவியல்-99. அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி பூர்ணிமாவை பள்ளியின் தலைவர் காலின் வேக்ஸ்டாப், தாளாளர் நவமணி, இயக்குநர் ஆக்னஸ் டேனியல், பள்ளியின் முதல்வர் பப்ஸி பெர்ஸிஸ் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
The post பிளஸ்2 பொதுத்தேர்வில் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி மாவட்ட முதலிடம் appeared first on Dinakaran.