பிளஸ்1 மாணவி 4 மாதம் கர்ப்பம் அத்தை மகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு செய்யாறு அருகே

4 weeks ago 5

செய்யாறு, டிச.20: செய்யாறு அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய அத்தை மகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. அவரது 16வயது மகள் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று சோர்வடைந்த நிலையில் இருந்ததால் மாணவியின் பெற்றோர்கள் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் பள்ளி மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விவரத்தை கேட்டுள்ளர்.
அப்போது வட தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவியின் அத்தையின் மகன் மனோ (22), என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 4 மாதத்திற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அழுதுள்ளார். இதுகுறித்து பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராணி வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மனோவை தேடி வருகின்றனர்.

The post பிளஸ்1 மாணவி 4 மாதம் கர்ப்பம் அத்தை மகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Read Entire Article